Saturday, 4 February 2012

சிட்டுக்குருவி என்ன அத்தனை முக்கியமா? - சூழலியல் உரை ...


கவின்மிகு கானகம் எனும் தலைப்பில் உரையாற்றிய கவிஞர் கோவை சதாசிவம் பங்கேற்ற அனைவரையும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் அடர்த்தியான காட்டுக்குள் அழைத்துச் சென்றார் என்றே சொல்ல வேண்டும்.

புத்தகக் கண்காட்சியில் கானகம் காப்போம் கானுயிர் காப்போம் கண்காட்சியை பார்வையிட வந்திருந்த குழந்தைகளுடனான சொந்த அனுபவத்துடன் உரையைத் தொடங்கினார்புகைப்படக் கண்காட்சிக்கு வரும் குழந்தைகள் யானையின் படத்தையும் குருவியின் படத்தையும் பார்த்து படுகிற பரவசத்தை குரலில் கொண்டு வந்தார்குருவியைப் படத்தில் பார்க்கிற குழந்தைகள் நிஜத்தில் ஒன்று கேட்கஅதை தர இயலாது என்று தெரிந்தும் தருவதாக பொய் சொல்லி விட்டு குழந்தைகள் கேட்கிறார்கள் தங்கள் சிட்டுக்குருவி எங்கே என்றுஎன்ன பதில் சொல்லப் போகிறோம் என்று சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்சிட்டுக்குருவிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு இரண்டுக்கும் பேசத்தெரியும் ஆனால் பொய் சொல்லத்தெரியாதுசிட்டுக்குருவிகளைப் பற்றி பேசும்போது பாரதியைத் தாண்டி பேச முடியாதுகவிஞன் பாரதி மகாகவி பாரதியாக மாறிய காலம் என்பது சோறு பொங்குவதற்காக குறியாப்பாக செல்லம்மா வாங்கி வைத்திருந்த அரிசியை இரண்டு கை நிறைய அள்ளி சிட்டுக்குருவிக்கு தின்னக்கொடுத்த காலத்தில்தான்சிட்டுக்குருவியை ஒத்த ராபின் என்றொரு பறவை அமெரிக்க தேசத்தில் இருந்ததுகடுமையான குளிர் வாட்டி வதைக்கிற 9 மாதங்களைக் கடந்து கோடை காலத்துக்காக மக்கள் காத்துக்கிடக்கிற வேளையில் ராபின் பறவை பாட ஆரம்பித்தால் கோடைக்காலம் ஆரம்பிக்க 10 நாட்களே இருக்கிறது என்று அர்த்தமாகும்ஆனால், 1961ம் ஆண்டு பூஞ்சைகளை ஒழிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நாடு முழுக்க டி டி டி என்ற பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க 1962ம் ஆண்டிலிருந்து கோடைக்காலத்துக்கு கட்டியம் கூறும் ராபின் பறவை இல்லாமலே போனதுஇங்கே சிட்டுக்குருவிகளைக் கேட்கும் அதே குழந்தைப்பட்டாளம் தான் அங்கேயும் ராபின் பறவையைக் கேட்டதுஇது போலத்தான் மொரீசியஸ் தீவில் தன் மக்களை ஆள வந்த போர்ச்சுகீசியர்களைக்கூட டோடோ என்ற பறவை வரவேற்றதுஆனால் வேதனை என்னவென்றால் குருவியையும் உணவாகவே பார்த்த போர்ச்சுகீசியர்களை வழியனுப்ப டோடோ பறவைகள் இல்லைஇப்படித்தான் 1300 வகையான பறவைகளில் 159 வகையான பறவைகள் அருகி வருகிறதுயாருக்கும் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லைகுழந்தைகள் கேட்கிறார்கள் சிட்டுக்குருவிகள் எங்கேராபின் எங்கேடோடோ எங்கேநியாயமாக அது அவர்களின் சொத்துஇதைப்போலத்தான் மலைகள்நமக்கு அருகில் இருக்கிற மேற்குத்தொடர்ச்சி மலையை கடந்த ஆண்டு ஆய்வு செய்த வல்லுனர்கள் இந்த மலைசெ.மீ வளருவதற்கு 1000 ஆண்டுகள் ஆயிருக்குமென்றுஇன்னும் தெளிவாகவே ஆய்வு முடிவுகள் சொல்கிறது இது இமயத்தை விட மூத்த மலையென்றுகடந்த ஆண்டு வல்லுனர்கள் சொன்னதை நூறாண்டுகளுக்கு முன்பே முப்பாட்டன் சொன்னான் முதுமலையென்றுநதி மூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்று நதியின் வரலாற்றை சொல்லித்தராததால்தான் சாமியார் தலையில் பூவைக்கொட்டிவிட்டு நதியின் தலையில் நஞ்சைக்கொட்டுகிறான்மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காடுகள் கடந்த 2009ம் ஆண்டு சர்வதேச அளவிலான பல்லுயிர் ஆண்டாக அறிவிக்கப்பட்டு பல்கலைக் கழகங்கள் அதற்கான நிதிகளை பெருமளவில் ஒதுக்கிய பின்னர் மாணவிகளை அழைத்துக்கொண்டு அடர் காட்டுக்குள் போன அனுபவம் நம்மையும் உடன் அழைத்துச் செல்வதாகவே தோன்றியதுகாடுகளுக்குள் சென்று வருவதான அனுபவத்தை விவரிக்க விவரிக்க பிரமிப்பின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றார்கானகத்தின் பேருயிரான யானை காட்டை உருவாக்கி காத்து வருவதும்இன்னமுமே யானைகள் தாய்வழிச்சமூகமாக வாழ்ந்து வருவதும், 19 யானைகள் வரை கொண்ட ஒரு யானைக்குடும்பம் முதல்யானைகள் நின்று மேய்ந்தால் காடு அழிந்து விடும் என்பதால் நடந்து கொண்டே மேய்வதும்யானையின் சாணம் பட்டாம்பூச்சிகளுக்கு உணவையும் வெதுவெதுப்பையும் தருவதும்உயரமான மரங்களில் இருக்கிற கொப்புகளை உடைத்துப் போடுவது  பின்னால் வருகிற மாடுகளுக்கும் மான்களுக்குமாக என்பதும்புதிய தகவல்களாக மட்டுமல்லாதுகானகத்திடம் மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகவும் இருந்தது.
ஒரு மாப்பிள்ளை அழைப்புக்காக வேலூர் வந்த கேரளத்து யானை 30 மணி நேர பட்டினிக்குப் பிறகு பசியாறப்போன போதும் தன்னைத்தாக்கிய மின்சாரம் பாகனைத்தாக்கக் கூடாது என்பதற்காக பாகனைத்தள்ளி விட்டதும் பாகனைத்தள்ளி விட்டதற்காக பொதுமக்களிடம் அடிவாங்கியதும் ஐந்தறிவு யாருக்கு என்ற கேள்வியை ஏற்படுத்தியதுஇதுபோலத்தான் தாய்லாந்தில் சுற்றுலாப்பயணிகளை அம்பாரியில் ஏற்றிக்கொண்ட வெள்ளையானைகள் வழக்கத்துக்கு மாறாக வேகமாக ஓடியதும் யானைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று ஏகடியம் பேசியவர்களுக்கும்யானை வேகமாக ஓடுவதால் தான் ஆபத்து என்று நினைத்த அம்பாரியில் இருந்தவர்களுக்கும் யானை ஓடிவந்த நின்ற இடம் வரை கடல் சுனாமியாக வந்தது தெரியாமல் போனது பண்பாடற்ற தொலைநோக்கற்ற மனிதர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்பவர்கள் தங்கள் வார்த்தைப்பிரயோகங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய சிந்தனைக்கான புதிய செய்தியாகும்.
வெப்பமான இடங்களில் கூம்பு போலவும் குளிரான இடங்களில் குடை போலவும் புற்றுக்கட்டுகிற விஞ்ஞானி கரையான் வெப்பக்கடத்திகளைக்கொண்டு புற்றுக்கட்டியிருப்பதும்புற்றுக்கடியில் பூஞ்சைத்தோட்டங்களை உருவாக்குகிற கரையான்கள் பற்றிய தகவல்கள் சிந்தனையைக் கிளறிவிட்டனமாமியாருக்குப் பயந்து மருமகள் கரையான் புற்றில் கொட்டிய நெல்லுச்சோறும் கோழிக்கறியும் தான் கரையான் புற்றுக்குப் பக்கத்தில் இருந்து வருகிற ஈசலும் காளானும் என்கிற பாட்டிகளின் செவிவழிக்கதைக்கும் கரையான் புற்றுக்கும்ஈசலுக்கும்காளானுக்கும் இருக்கிற அறிவியல் தொடர்புக்கும் முடிச்சுப்போட்டு சொன்ன செய்திகளும் சொன்ன முறையும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது என்றால் மிகையாகாதுமனிதனுக்கு 20 கோடி ஆண்டுகள் மூத்த உயிரினமான கரையானை வைத்து சிற்றியிரின் பேரியக்கம் என்கிற பல்கலைப் பாடங்களை மேடையில் நடத்தினார்மூத்த உயிரினமான கரையானுக்கும் மூத்த தாவரமான புல்லுக்கும் உள்ள தொடர்பை விளக்கிபுல்லினமான மூங்கில் காய்கிற இடத்தில் கரையான் புற்றுக்கட்டுவதைச்சொல்லி உலகில் ஒவ்வொரு உயிருக்கும் இடையில் ஒரு அறுபடாத சங்கிலி இருப்பதையும்அந்த சங்கிலியை பூவுலகின் கடைசிக்குழந்தையான மனிதன் மட்டுமே அறுக்க முயற்சிப்பதையும் இத்தனையையும் செய்துவிட்டுயானைகள் அட்டகாசம் என்று எழுதுகிற மனிதர்களின் அட்டகாசம் என்று எழுத யானைகளிடம் பத்திரிகை இல்லையே என்று கேட்ட கேள்வி நகைச்சுவையாக இருந்தாலும் கேள்வியின் உள்ள்டக்கம் மனசாட்சி உள்ளோரை தட்டி எழுப்புவதாகவே இருந்ததுபூமி உயிர்க்கோளம் என்ற பெயரை சும்மா பெறவில்லைஇரண்டுக்கு இரண்டடி உள்ள 4 சதுரடி கானகத்தில் மட்டும் 65 உயிரினங்கள் வாழ்வதால்தான் என்ற பல ஆண்டுகள் தேடிப்பிடித்த ஆய்வுகளை பார்வையாளர்களுக்கு ஒரு நொடியில் சொல்லி விட்டுப்போனார்பருவநிலை மாற்றங்களை முன்னுணர்ந்த சிற்றுயிர்கள் நிறைந்திருக்கிற பூமிப்பந்தை காக்க வேண்டிய பெரும் பொறுப்பினை நினைவூட்டிஇத்தனைக்குப் பிறகும் நியூட்டன் நான் கடற்கரையில் விளையாடும் சிறுவன் என்று சொன்ன வரிகளோடு நான் ஒரு கானகக்கடலை கடற்கரையில் நின்று வேடிக்கை பார்க்கும் சிறுவன் என்று தன்னடக்கத்தோடு முடித்தார்

0 comments:

Post a Comment

Video Bar

Loading...